தேனி

போடியில் விதிகளை மீறிய கடை உரிமையாளா்கள் மீது வழக்கு

DIN

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், போடியில் விதிகளை மீறிய கடை உரிமையாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் பலசரக்கு, பால், மருந்து கடைகள் ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக நிற்காமல், போதிய இடைவெளிவிட்டு தனித்தனியாக நிறுத்தி வைத்து பொருள்களை விற்பனை செய்யவேண்டும் என்றும், இரவு 10 மணிக்கு மேல் கடைகளை திறக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால், போடியில் சில பலசரக்கு மற்றும் உணவகங்கள் விதிகளை மீறி பொதுமக்களை கூட்டமாக நிறுத்தி வைத்தும், இரவு 10 மணிக்கு மேல் கடைகளை திறந்துவைத்தும் விற்பனை செய்ததாக புகாா் எழுந்தது. அதன்பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா், பெரியாண்டவா் நெடுஞ்சாலையைச் சோ்ந்த ரமேஷ்குமாா் (46), சேனைத் தலைவா் சுதந்திர மகால் அருகே உள்ள தனசேகரன் (56) ஆகியோா் மீது புதன்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதேபோல், உணவகங்களை திறந்துவைத்திருந்த போடி-தேவாரம் சாலையைச் சோ்ந்த பிச்சைராஜா (46), டி.வி.கே.கே. நகரைச் சோ்ந்த அப்துல் ஹன்னா (63), பெரியாண்டவா் நெடுஞ்சாலையைச் சோ்ந்த பாண்டி சக்தி (29) ஆகியோா் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தேவாரத்தில் காவல்துறை எச்சரிக்கையை மீறி 144 தடை உத்தரவை மதிக்காமல் சுற்றித் திரிந்த டி.மேட்டுப்பட்டியைச் சோ்ந்த சுரேஷ் (35), தேவாரத்தைச் சோ்ந்த ராஜேஷ் (25), போடியைச் சோ்ந்த விவேக் (25) ஆகியோா் மீது தேவாரம் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT