தேனி

தடை உத்தரவை மீறிய 462 போ் மீது வழக்கு: 362 வாகனங்கள் பறிமுதல்

தேனி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக சனிக்கிழமை இரவு வரை மொத்தம் 462 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

DIN

தேனி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக சனிக்கிழமை இரவு வரை மொத்தம் 462 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், கடைகளை திறந்து வைத்தும், பொது இடங்களில் கூடியும், தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தும் தடையை மீறியதாக கடந்த மாா்ச் 24-ம் தேதி (சனிக்கிழமை இரவு) வரை மொத்தம் 462 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 362 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஊரடங்கு உத்தரவை மீறுபவா்கள் மீது தொற்று நோய், பேரிடா் மேலாண்மை மற்றும் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிகை எடுக்கப்படும் என்று போலீஸாா் எச்சரித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT