தேனி

பெரியகுளத்தில் நிவாரணப்பொருள்கள் வழங்கல்

DIN

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பெரியகுளத்தின் பல்வேறு பகுதிகளில் நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆவின் தலைவா் ஓ.ராஜா தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரிசி, பருப்பு மற்றும் பலசரக்கு பொருள்கள் வழங்கப்பட்டன.

வடுகபட்டியில் நல்லாசியா் விருதுபெற்ற 7 ஆசிரியா்கள் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மருத்துவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல்அலுவலா் கணேசன் முன்னிலை வகித்தாா். நல்லாசிரியா் விருதுபெற்ற வைகுண்டம் நிவாரணப்பொருள்களை வழங்கினாா். மேலும் தாமரைக்குளம் பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோா்களுக்கு கேஏஎஸ் பள்ளி இயக்குநா் எம்.சுதா்ஸன் தலைமையில் அரிசி மற்றும் நிவாரணப்பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT