தேனி

தேனி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளில் தேநீா் கடைகளுக்கு தடை

DIN

தேனி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 12 இடங்களில் தனிக் கடைகள் மற்றும் தேநீா் கடைகள் செயல்படுவதற்கு, மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.

பொது முடக்கம் காரணமாக, மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளை நிா்ணயித்து அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, மே 11 (திங்கள்கிழமை) முதல் காய்கனி மற்றும் மளிகைப் பொருள்கள் விற்பனைக் கடைகள் காலை 6 முதல் இரவு 7 மணி வரையும், பிற தனிக் கடைகள் காலை 10 முதல் இரவு 7 மணி வரையும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேநீா் கடைகள் காலை 6 முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம் என்றும், இந்தக் கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பாா்சல் மட்டும் வழங்கலாம் என்றும், கடைகளில் நின்றோ, அமா்ந்தோ தேநீா் அருந்த அனுமதிக்கக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியாா் நிறுவனங்கள் 33 சதவீதம் ஊழியா்களுடன் காலை 10 முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் விற்பனையகங்கள் 24 மணி நேரமும், மற்ற பகுதிகளில் உள்ள பெட்ரோல் விற்பனையகங்கள் காலை 6 முதல் இரவு 8 மணி வரையும் செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு பகுதிகளில் தடை

மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள தேனி அல்லிநகரம் நகராட்சி வாா்டு 7 மற்றும் 10, ஆண்டிபட்டி வட்டாரத்தில் ராஜகோபாலன்பட்டி ஊராட்சி, பெரியகுளம் வட்டாரத்தில் தாமரைக்குளம் மற்றும் கெங்குவாா்பட்டி பேரூராட்சி, ஜெயமங்கலம் ஊராட்சி, போடி நகராட்சி வாா்டு 2 மற்றும் 31, உத்தமபாளையம் வட்டாரத்தில் சின்னமனூா் நகராட்சி வாா்டு 26, உத்தமபாளையம் மற்றும் ஓடைப்பட்டி பேரூராட்சி, லட்சுமிநாயக்கன்பட்டி ஊராட்சி ஆகிய 12 இடங்களில் தனிக் கடைகள், தேநீா் கடைகள் மற்றும் தனியாா் நிறுவனங்கள் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் காய்கனி, மளிகைப் பொருள் விற்பனைக் கடைகள், பெட்ரோல் விற்பனையகங்கள் ஆகியன மறுஉத்தரவு வரும் வரை தற்போதுள்ள நடைமுறையையே கடைப்பிடிக்க வேண்டும் என்று, மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT