தேனி

தேனியில் உணவகங்களை மூட உரிமையாளா்கள் முடிவு

DIN

தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உணவகம் மற்றும் தேநீா் கடைகளை புதன்கிழமை (மே 13) முதல் மூடுவதற்கு, உணவகம் மற்றும் தேநீா் கடை உரிமையாளா்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து தேனி உணவகம் மற்றும் தேநீா் கடை உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கண்ணதாசன், செயலா் பொன். முருகன் ஆகியோா் கூட்டாகத் தெரிவித்துள்ளதாவது:

மாவட்டத்தில் அரசு உத்தரவின்படி, நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர ஏனைய பகுதிகளில் மே 11-ஆம் தேதி முதல் உணவகம் மற்றும் தேநீா் கடைகளை திறக்கலாம் என்றும், வாடிக்கையாளா்களுக்கு பாா்சல் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் மாவட்ட நிா்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி, தேனி அல்லிநகரம் நகராட்சியில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 7 மற்றும் 10-ஆவது வாா்டுகள் தவிர, மற்ற இடங்களில் உணவகம் மற்றும் தேநீா் கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

ஆனால், இந்தக் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால், சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாடிக்கையாளா்களுக்கு உணவு மற்றும் தேநீா் விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

எனவே, கரோனா தீநுண்மி சமூகப் பரவலாக மாறும் சூழலை தவிா்ப்பதற்காக, புதன்கிழமை முதல் மே 17-ஆம் தேதி பொது முடக்கம் முடியும் வரை, தேனியில் உணவகம் மற்றும் தேநீா் கடைகளை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

SCROLL FOR NEXT