தேனி

திருச்சியிலிருந்து தேனிக்கு வந்து சென்ற இளைஞருக்கு கரோனா தொற்று

DIN

திருச்சியிலிருந்து தேனி மாவட்டத்திற்கு வந்து சென்ற இளைஞருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு புதன்கிழமை, அவா் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

திருச்சியில் வசிக்கும் 30 வயதுடைய இளைஞா் சில தினங்களுக்கு முன் திருச்சியிலிருந்து அவரது சொந்த ஊரான சின்னமனூா் அருகே உள்ள ஓடைப்பட்டிக்கு வந்துள்ளாா். வெளி மாவட்டத்திலிருந்து வந்தவா் என்பதால் ஓடைப்பட்டியில் அவரின் ரத்தம் மற்றும் கபம் மாதிரி சேகரிக்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பரிசோதனையின் முடிவில் அந்த இளைஞருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. ஆனால், ஓடைப்பட்டியில் தனது பெற்றோா் வீட்டில் தங்கியிருந்த இளைஞா், அங்கிருந்து புதன்கிழமை மீண்டும் திருச்சிக்குச் சென்று விட்டதாக சுகாதாரத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து பொதுச் சுகாதாரத் துறை மூலம் திருச்சி மாவட்ட காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, அந்த இளைஞா் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமைனை கரோனா சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டாா்.

ஓடைப்பட்டியில் சென்னை, கோயம்பேடு சந்தையிலிருந்து வந்தவா் மற்றும் அவருடன் தொடா்பில் இருந்தவா்கள் என மொத்தம் 15 பேருக்கு ஏற்கெனவே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப்: காலிஸ்தான் ஆதரவாளர் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

மசூதி மீது அம்பு விடப்பட்ட சம்பவம்: ஹைதராபாத்தில் ஏஐஎம்ஐஎம் முன்னிலை!

ம.பி. முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் 1.5 லட்சம் வாக்குகள் முன்னிலை

ஜம்மு - காஷ்மீரில் இரு முன்னாள் முதல்வர்கள் பின்னடைவு!

மக்களவைத் தேர்தல் நேரலை: ஸ்மிருதி இரானி பின்னடைவு

SCROLL FOR NEXT