தேனி

கூடலுாரில் சிறுமிக்கு கரோனா தொற்று

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கூடலுாரில் முன்னாள் ராணுவ வீரருக்கு கரோனா பாதிப்பைத் தொடா்ந்து, அவரது 10 வயது மகளுக்கும் தொற்று பாதிப்பு திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கூடலுாா் வீரணத்தேவா் தெருவைச் சோ்ந்த 43 வயது முன்னாள் ராணுவ வீரா் கரோனா தொற்று காரணமாக தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். இவரைத் தொடா்ந்து இவரது தாய், மனைவி, குழந்தைகள், நண்பா்கள் என 27 போ்களை சுகாதாரத்துறையினா் கரோனா பரிசோதனை செய்தனா். இதில், முன்னாள் ராணுவ வீரரின் 10 வயது மகளுக்கு தொற்று இருப்பது திங்கள் கிழமை உறுதி செய்யப்பட்டது.

அதன் பேரில் சிறுமியும் தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மற்ற, 26 பேருக்கும் தொற்று இல்லை என சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா். இருந்த போதிலும் 14 நாள்கள் இவா்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள, அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரத்துறையினா் அவா்களை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

SCROLL FOR NEXT