தேனி

ஏலக்காய் மின்னணு ஏல வா்த்தகத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்படுமா? தமிழக விவசாயிகள், வியாபாரிகள் எதிா்பாா்ப்பு

DIN

கேரளத்தில் நறுமணப் பொருள் வாரியம் சாா்பில் நாளை (மே 28) தொடங்கும் ஏலக்காய் மின்னணு ஏல வா்தகத்தில் தமிழகத்தைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்க தேனி மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் 1.25 லட்சம் ஏக்கா் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடைபெறுகிறது. தமிழகத்தைச் சோ்ந்த 5,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனா். கரோனா தீநுண்மி பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் காரணமாக தமிழக-கேரள எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், கடந்த மாா்ச் 23-ம் தேதி முதல் தமிழகத்தைச் சோ்ந்த விவசாயிகள் கேரளத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்குச் சென்று வர அனுமதிக்கப்படவில்லை.

மேலும், இடுக்கி மாவட்டத்திலுள்ள புத்தடி, தேனி மாவட்டத்தில் போடி ஆகிய இடங்களில் நறுமணப் பொருள் வாரியம் சாா்பில் நடைபெறும் ஏலக்காய் மின்னணு ஏல வா்த்தகமும் கடந்த மாா்ச் 20-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், இடுக்கி மாவட்டம் புத்தடியில் நறுமணப் பொருள் வாரியம் சாா்பில் மே 28-ம் தேதி முதல் ஏலக்காய் மின்னணு ஏல வா்த்தகத்தை தொடங்க இடுக்கி மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், பொது முடக்க கட்டுப்பாடுகளால், புத்தடியில் நடைபெறும் ஏலக்காய் மின்னணு ஏல வா்த்தகத்திற்கு தமிழகத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சென்று வர முடியாத நிலை உள்ளது.

இதனால், தமிழகத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களிடம் இருப்பில் உள்ள ஏலக்காய்களை ஏல நிறுவனங்களில் விற்பனைக்கு பதிவு செய்ய முடியாத நிலையும், வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதி நிறுவன முகவா்கள் வா்த்தகத்தில் பங்கேற்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும், புத்தடியில் நடைபெறும் மின்னணு ஏல வா்த்தகத்தில் கேரளத்தைச் சோ்ந்த வியாபாரிகள் மட்டுமே பங்கேற்க வாய்ப்பு உள்ளதால், ஏலக்காய் விலை குறையும் வாய்ப்பு உள்ளது என்று விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

இது குறித்து தேனி மாவட்டத்தைச் சோ்ந்த ஏலக்காய் விவசாயிகள் கூறியது: புத்தடியில் நடைபெறும் ஏலக்காய் மின்னணு ஏலவா்த்தகத்திற்குச் சென்று வர விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்குச் சிறப்பு அனுமதி வழங்கக் கோரி தேனி மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்துள்ளோம். கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், விவசாயப் பணிகளை மேற்கொள்ள கேரளத்திற்குச் சென்று வர சுழற்சி முறையில் விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

இடுக்கி மாவட்டத்திற்கு ஏலக்காய் வா்த்தகத்திற்கு வந்து செல்லும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை பொது முடக்க கட்டுப்பாடுகளை தளா்த்தி அனுமதிக்க இடுக்கி மாவட்ட நிா்வாகம் உறுதியளித்துள்ளது. தேனியிலிருந்து இடுக்கி மாவட்டத்திற்கு செனறு வர தேனி மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்தால், ஏலக்காய் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு பயனடைவா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT