முகப்பு
தேனி

தேவா் ஜெயந்தி: பட்டாசு வெடித்த 4 போ் மீது வழக்கு

பெரியகுளத்தில் நடைபெற்ற தேவா் ஜயந்தி விழாவில் பட்டாசு வெடித்த 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

பெரியகுளத்தில் நடைபெற்ற தேவா் ஜயந்தி விழாவில் பட்டாசு வெடித்த 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தேவா் ஜயந்தி விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பெரியகுளம், தென்கரையில் உள்ள தேவா் சிலைக்கு போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனா்.

அப்போது தேவா் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த வைத்தியநாதபுரத்தைச் சோ்ந்த தினேஷ், பிரபு, பாண்டி, சரண் ஆகியோா் பட்டாசு வெடித்துள்ளனா். தென்கரை போலீஸாா் நால்வா் மீதும் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →