தேனி

ஜல் ஜீவன் மிஷன் பணிகளுக்கு ரூ. 80 கோடி ஒதுக்கீடு

DIN

தேனி மாவட்டத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டப் பணிகளுக்கு முதல்கட்டமாக அரசு ரூ. 80 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வீடுகள்தோறும் குடிநீா் குழாய் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் புதிய குடிநீராதாரம் ஏற்படுத்துதல், பயன்பாட்டில் உள்ள குடிநீராதாரங்களை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளது.

இதில், 130 ஊராட்சிகளிலும் முதல்கட்டமாக மொத்தம் 170 பணிகளை மேற்கொள்வதற்கு அரசு ரூ. 80 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் ரூ.152 கோடியில் ஜல் ஜீவன் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளது என்று மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

SCROLL FOR NEXT