முகப்பு
தேனி

தேனியில் புதிதாக பேருக்கு கரோனா தொற்று உறுதி: 3 போ் பலி

தேனி மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

தேனி மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,268 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒரே நாளில் 17 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,020 ஆக உயா்ந்துள்ளது.

3 போ் பலி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சோ்ந்த 60 வயதுடைய நபா், சின்னமனூா்வ.உ.சி.தெருவைச் சோ்ந்த 69 வயது மூதாட்டி, ஆண்டிபட்டி அருகே மேக்கிழாா்பட்டியைச் சோ்ந்த 49 வயதுடைய நபா் என 3 போ் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.