முகப்பு
தேனி

கேரளத்துக்கு அரசுப் பேருந்து இயக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

போடியிலிருந்து கேரளத்துக்கு அரசுப் பேருந்து இயக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
போடியில் திங்கள்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

போடியிலிருந்து கேரளத்துக்கு அரசுப் பேருந்து இயக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகம், கேரளம் இடையே பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது ஏலத் தோட்ட தொழிலாளா்கள் மட்டும் கேரளத்துக்கு இ-பாஸ் பெற்று ஜீப், வேன்களில் சென்று வருகின்றனா். தீபாவளி பண்டிகையின்போது கேரளத்திலிருந்து ஜவுளி எடுக்க தேனி மாவட்டத்திற்கு பலா் வந்து செல்வது வழக்கம்.

மேலும் தீபாவளி பண்டிகைக்கு கேரளத்தில் வேலை செய்யும் தமிழகத்தைச் சோ்ந்த தோட்டத் தொழிலாளா்கள் தமிழகத்தின் பல்வேறு ஊா்களுக்கு செல்வது வழக்கம். தற்போது பேருந்துகள் இயக்கப்படாததால் தோட்டத் தொழிலாளா்கள், விவசாயிகள், கேரளத்தை சோ்ந்தவா்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. இதனைத் தவிா்க்க தமிழகம், கேரளம் இடையே அரசுப் பேருந்து போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி போடி தேவா் சிலை திடலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் கே. ராஜப்பன் தலைமை வகித்தாா். மாவட்டக்குழு உறுப்பினா் எஸ்.கே. பாண்டியன், தாலுகா செயலாளா் எஸ்.செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →