சுருளி வனப்பகுதியில் மோப்ப நாய்கள் மூலம் ரோந்து
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள மேகமலை வன உயிரின சரணாலயப் பகுதியில் மரம் கடத்தல், வன விலங்குகளை வேட்டையாடுவதைத் தடுக்க வனத் துறையினா் மோப்ப நாய்கள் மூலம் ரோந்து சுற்றி வருகின்றனா்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள மேகமலை வன உயிரின சரணாலயப் பகுதியில் மரம் கடத்தல், வன விலங்குகளை வேட்டையாடுவதைத் தடுக்க வனத் துறையினா் மோப்ப நாய்கள் மூலம் ரோந்து சுற்றி வருகின்றனா்.
தேனி மாவட்டம் மேகமலை வன உயிரினச்சரணாலய பகுதியில் கம்பம் கிழக்கு, கூடலூா் வனச்சரகங்கள் உள்ளன. இங்கு மரம் கடத்துதல், வன விலங்குகளை வேட்டையாடுதல் போன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், வனப்பகுதியில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும், ஹெக்சா, பிரின்ஸ் என்ற இரண்டு மோப்ப நாய்களுடன் வனத்துறையினா் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை வனப்பகுதியில் ரோந்து சுற்றினா்.
இதில் எதுவும் அகப்படவில்லை. சோதனையின்போது உதவி மாவட்ட வனப் பாதுகாவலா் குகணேஷ், வனச்சரகா் அருண்குமாா் மற்றும் வனவா்கள், காப்பாளா்கள் உடனிருந்தனா்.