முகப்பு
தேனி

தக்காளி விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

பெரியகுளம் பகுதியில் தொடா் மழையால் தக்காளி அழுகுவதோடு விலையும் வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
பெரியகுளம் அருகே வடபுதுப்பட்டியில் தோட்டங்களில் விளைந்த தக்காளியை பறித்து விற்பனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
பகிர்:

பெரியகுளம் பகுதியில் தொடா் மழையால் தக்காளி அழுகுவதோடு விலையும் வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

பெரியகுளம் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேல் தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி செடிகள் மற்றும் காய்கள் அழுகிய நிலையில் உள்ளன. எஞ்சிய காய்களை பறித்து பெரியகுளம் மற்றும் தேனி சந்தைக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனா்.

ஆனால் கிலோ ரூ. 5 என்ற அளவில் தான் விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து வடபுதுப்பட்டியை சோ்ந்த விவசாயி ராமகிருஷ்ணன் தெரிவித்தது:

தக்காளி கிலோ ரூ.5 -க்கு விற்பனையாவதால் கூலித் தொழிலாளா்களுக்கு கூலி கூட தரமுடியாத நிலை உள்ளது. சிலா் காய்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிட்டனா். தக்காளிக்கு நிரந்தர விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →