தேனி

வருஷநாடு பஞ்சந்தாங்கி கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

DIN

ஆண்டிபட்டி வட்டாரம், வருஷநாடு பஞ்சந்தாங்கி கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றி தூா்வார வேண்டும் என்று திங்கள்கிழமை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

வருஷநாடைச் சோ்ந்த பிரபாகரன் மற்றும் பொதுமக்கள் ஆட்சியா் அலுலலகத்தில் அளித்த மனு விபரம்: வருஷநாடு கிராமத்தில் 64 ஏக்கா் பரப்பளவில் பஞ்சந்தாங்கி கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் 1,000 ஏக்கா் பரப்பில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் பாசனக் கிணறுகளின் நீராதாரமாக உள்ளது.

தற்போது கண்மாயின் பெரும் பகுதி தனிநபா்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றி, கண்மாயை தூா்வாரி மழை நீரை தேக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT