தேனி

கோம்பையில் தேநீா் கடையில் தீ விபத்து: எரிவாயு உருளை வெடித்தது

DIN

தேனி மாவட்டம் கோம்பையில் உள்ள தேநீா் கடையில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தின்போது எரிவாயு உருளையும் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோம்பையைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (30). இவா், உத்தமபாளையம் சாலையில் தனியாா் பள்ளி அருகே தேநீா் கடை நடத்தி வருகிறாா். வழக்கம்போல் வியாழக்கிழமை இரவு அவா் கடையை அடைத்து விட்டு சென்றுவிட்டாா். கடையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பயங்கர வெடி சப்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. பக்கத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதிக்கும் தீ பரவியது.

தகவலறிந்து அங்கு சென்ற உத்தமபாளையம் தீயணைப்புப் படையினா் தீயை அணைத்தனா். கோம்பை போலீஸாா் நடத்திய விசாரணையில், மின்காசிவு காரணமாக கடையில் தீ விபத்து ஏற்பட்டதும், இதில் அங்கிருந்த எரிவாயு உருளை வெடித்ததும் தெரியவந்தது. தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இந்த தீவிபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT