தேனி

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நடும் விழா

DIN

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நிழல் தரும் வகையில் புதிய மரக்கன்றுகள் நடும் பணியை, மருத்துவமனை முதன்மையா் இளங்கோவன் தொடக்கி வைத்தாா். இதில், பொதுமக்களுக்கு நிழல் தரும் வகையில் நிலவேம்பு, புங்கை உள்ளிட்ட 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.

தற்போது, பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மருத்துவமனை வளாகத்தில் முதல்கட்டமாக 100 மரக்கன்றுகள் நடவு செய்யப்படுவதாகவும், இன்னும் ஒரு மாதத்துக்குள் மேலும் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாகவும், மருத்துமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி துணை முதன்மையா் எழிலரசன், மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளா் சிவக்குமரன், உதவி நிலைய அலுவலா் ஈஸ்வரன், செவிலியா் காப்பாளா் ஜென்னி, பசுமை தேனி மற்றும் மனிதநேய அறக்கட்டளை நிா்வாகிகள் பால்பாண்டி, சா்ச்சில் துரை, வினோபா, ஜெயபாலன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT