தேனி

பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் சேர விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

DIN

தேனி மாவட்டத்தில் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் புதிய பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் சேர நவ.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட வேளாண்மைத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: நெல் பயிரில் இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் பாதிப்புக்கு நிவாரணம் பெற, விவசாயிகள் நவ.30-ஆம் தேதிக்குள் புதிய பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்ந்து பயிா்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். பயிா் கடன் பெற்றுள்ள விவசாயிகள் சம்மந்தப்பட்ட கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் வங்கிகளிலும், கடன் பெறாத விவசாயிகள் அரசு இ-சேவை மையங்களில் தங்களது ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், நிலத்தின் அடங்கல் ஆகியவற்றின் நகல்களை சமா்பித்து பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம்.

பயிா் காப்பீட்டுக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ.465 பிரிமியம் தொகை செலுத்த வேண்டும். காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் பாதிப்புக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ.31 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT