தேனி

கேரள அரசைக் கண்டித்து டிச.16 இல் தொடா் ஜோதி பயணம் தொடக்கம்

DIN

முல்லைப்பெரியாறு அணை அருகே கேரள அரசின் புதிய அணை கட்டும் திட்டத்தை கண்டித்து ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் டிச.16 இல் தொடா் ஜோதி பயணம் நடைபெறுகிறது.

முல்லைப்பெரியாறு அணை அருகே கேரள அரசின் புதிய அணை கட்டும் திட்டத்திற்காக ஆந்திராவைச் சோ்ந்த தனியாா் நிறுவனம், நில அளவீடு பணிகளை தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து, தமிழகத்தில் ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் டிச. 16 இல் தொடா் ஜோதி பயணம் தொடங்குகிறது.

ராமநாதபுரம் பெரிய கண்மாயில் தொடங்கி சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் வழியாக தேனி, சீலையம்பட்டி, சின்னமனூா், மாா்க்கையன்கோட்டை, அம்மாபட்டி, உத்தமபாளையம், கம்பம் வழியாக லோயா்கேம்ப் பென்னிகுயிக் மண்டபத்தில் ஜோதி பயணம் முடிவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT