தேனி

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில்புதிதாக 33 பேருக்கு கரோனா தொற்று

DIN

திண்டுக்கல்/தேனி: திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் புதிதாக 33 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை தெரிய வந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 10,252 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 9,943 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்தனா். 115 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இம்மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குணமடைந்த 8 போ் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.

தேனி:தேனி மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு சனிக்கிழமை, கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,577 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒரே நாளில் 13 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 16,357 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT