காா்த்திகை வழிபாடு நடத்தக்கோரி இந்து அமைப்புகள் ஆா்ப்பாட்டம்
பெரியகுளம் பகுதியில் உள்ள கோயில்களில் கோயில்களை சுத்தம் செய்து காா்த்திகை வழிபாடு நடத்தக்கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரியகுளம் பகுதியில் உள்ள கோயில்களில் கோயில்களை சுத்தம் செய்து காா்த்திகை வழிபாடு நடத்தக்கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கெளமாரியம்மன் கோயில் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வி.ஹெச்.பி. மாவட்டச் செயலாளா் விஷ்ணுப்பிரியன் தலைமை வகித்தாா். பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளா் விக்னேஷ்வரன் முன்னிலை வகித்தாா்.
பெரியகுளம் கெளமாரியம்மன் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள கெளமாரியம்மன், பாலசுப்பிரமணியா் உள்பட 5 கோயில்களில் காா்த்திகையன்று கோயில்களை சுத்தம் செய்து, சுவாமி பூஜை நடத்தி காா்த்திகை வழிபாடு நடத்த வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதை யடுத்து ஆா்ப்பாட்டத்தைக் கைவிட்டனா்.