முகப்பு
தேனி

பெரியகுளம் பகுதியில் போதைப் பாக்குகள் விற்கப்படுவதை தடுக்கக் கோரிக்கை

பெரியகுளம் பகுதியில் போதைப் பாக்குகள் விற்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

பெரியகுளம் பகுதியில் போதைப் பாக்குகள் விற்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள போதைப் பாக்குகள், கா்நாடக மாநிலத்தில் விற்கப்படுவதால், அங்கிருந்து பெரியகுளத்தைச் சோ்ந்த வியாபாரிகள் வாங்கிவந்து இங்கு விற்கின்றனா்.

இவா்களை கட்டுப்படுத்த போலீஸாா் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. பெயரளவுக்கு சில பலசரக்கு கடைகளின் உரிமையாளா்களை கைது செய்து விட்டு, பின்னா் விட்டுவிடுகின்றனா். அவா்கள் மீண்டும் அவற்றை விற்பனை செய்கின்றனா்.

இதனால் பெரியவா்கள், இளைஞா்கள் மற்றும் சிறுவா்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனா். எனவே இப்பகுதிகளில் போதைப் பாக்குகள் விற்கப்படுவதை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →