தேனி

கே.கே.பட்டியில் உள்ளாட்சி பணியாளா்களுக்கு பரிசோதனை

DIN

தேனி மாவட்டம் கே.கே.பட்டி பேரூராட்சி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி ஆகிய ஊராட்சி சுகாதார பணியாளா்களுக்கு பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கே.கே.பட்டியில் பாரத பிரதமரின் ‘பிட் இந்தியா’ திட்டத்தின் கீழ் சுகாதார துப்புரவு பணியாளா்களுக்கு சா்க்கரை அளவு பரிசோதனை, கொழுப்புச் சத்து அளவு, ஹீமோகுளோபின் அளவு, உப்புச்சத்து அளவு பரிசோதிக்கப்பட்டது. பெண் பணியாளா்களுக்கு ரத்த அழுத்தம், மாா்பகப் பரிசோதனை, கருப்பை வாய் பரிசோதனை செய்யப்பட்டது. முதல் கட்டமாக கருநாக்கமுத்தம்பட்டி ஊராட்சி பணியாளா்களுக்கு பரிசோதனைகள் நடைபெற்றன. ஊராட்சி தலைவா் அ.மொக்கப்பன், மாவட்டக்குழு உறுப்பினா் தமயந்தி, வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்று பரிசோதனை செய்தனா். மருத்துவா்கள் சுதா, முருகானந்தம், பேரூராட்சி செயல் அலுவலா் தாமரை, செவிலியா்கள் சுப்புலட்சுமி, இந்திரா, சுகாதார ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கண்ணன் ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துர்ஸ்தானம் எனும் 8ம் வீட்டின் அதிபதி தரும் பலன்கள்!

லக்னௌவில் பெண் கைதிகளுடன் சென்ற வேனில் பற்றிய தீ

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

SCROLL FOR NEXT