தேனி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

DIN

பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தேனி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தாமரைக்குளம், சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் பழனிச்சாமி (47). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கடந்த 2019, மாா்ச் 2 ஆம் தேதி தென்கரை காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மகளிா் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.வெங்கடேசன், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த பழனிச்சாமிக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு சாா்பில் ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க மாவட்ட நிா்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT