தேவர் ஜயந்தி: கம்பம், கூடலூர் பகுதிகளில் அன்னதானம்
கம்பம், கூடலூர் பகுதிகளில் தேவர் குருபூஜை, ஜயந்தி விழாவை முன்னிட்டு சிலைகளுக்கு மாலை அணிவித்து கொண்டாடினர்.
கம்பம், கூடலூர் பகுதிகளில் தேவர் குருபூஜை, ஜயந்தி விழாவை முன்னிட்டு சிலைகளுக்கு மாலை அணிவித்து கொண்டாடினர்.
தேனி மாவட்டம், கம்பம் தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலை பராமரிப்பு வேலைகள் நடைபெறுவதால் அவரது முழு உருவப்படம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. நகர செயலாளர் பி.எஸ்.டார்லிங் ஜெகதீசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தார்.
தொழிலதிபர் குணசேகரன் அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கினார். விழாவில் நகர நிர்வாகிகள் ரஞ்சித், கணபதி, தனபால் உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர். இதேபோல் அனைத்து கட்சியினரும் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தனர். கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு காலையில் இருந்தே அனைத்துக் கட்சியினரும் மாலைகள் அணிவித்து இனிப்புகள் வழங்கினார்கள்.
தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் அன்னதானம் வழங்கினார்கள்.