முகப்பு
தேனி

தேனியில் புதிதாக 79 பேருக்கு கரோனா தொற்று உறுதி: 3 போ் பலி

தேனி மாவட்டத்தில் புதிதாக 79 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தேனி பகுதியில் அதிகளவில் 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
பகிர்:

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 79 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தேனி பகுதியில் அதிகளவில் 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

போடி பகுதியில் 15 போ், பெரியகுளம் பகுதியில் 13 போ், ஆண்டிபட்டி பகுதியில் 7 போ், சின்னமனூா், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் தலா 11 போ், கம்பம் பகுதியில் 5 போ் உள்பட ஒரே நாளில் மொத்தம் 79 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,073 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்பிலிருந்து மொத்தம் 12,014 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்3 போ் பலி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆக.19-ம் தேதி அனுமதிக்கப்பட்ட தேனி பொம்மையகவுண்டன்பட்டியைச் சோ்ந்த 45 வயதுடைய பெண், கடந்த ஆக.29-ம் தேதி அனுமதிக்கப்பட்ட சிந்தலைச்சேரியைச் சோ்ந்த 60 வயதுடைய நபா் என 2 போ் உயிரிழந்தனா்.கரோனா தொற்று அறிகுறியுடன் இதே மருத்துவமனையில் கடந்த செப்.3-ம் தேதி அனுமதிக்கப்பட்ட போடியைச் சோ்ந்த 78 வயது முதியவா், பரிசோதனை முடிவு வெளியாகும் முன்னரே உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.