முகப்பு
தேனி

கம்பத்தில் 67 நாட்களுக்குப் பிறகு வாரச்சந்தை திறப்பு

கம்பத்தில் கரோனா பொதுமுடக்கத்தால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த வாரச்சந்தை 67 நாட்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:17 PM
கம்பத்தில் 67 நாட்களுக்குப் பிறகு வாரச்சந்தை திறப்பு
பகிர்:

கம்பத்தில் கரோனா பொதுமுடக்கத்தால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த வாரச்சந்தை 67 நாட்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தேனி மாவட்டம்  கம்பம்,   கே.கே.பட்டி,ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, நாராயணதேவன் பட்டி, சுருளிப்பட்டி மற்றும் புதுப்பட்டி ஆகிய ஊர்களிலிருந்து வாரம் தோறும்  செவ்வாய்க்கிழமை கம்பத்தில் நடைபெறும் வாரச் சந்தைக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள்  மளிகை சாமான்கள் மற்றும் காய்கறிகள் வாங்க கூடுவது வழக்கம்.

இந்நிலையில் கரோனா தொற்றுப் பரவலால் கம்பம் வாரச் சந்தை மூடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கரோனா ஊரடங்கால்  அடைக்கப்பட்டிருந்த கம்பம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை செயல்படத் தொடங்கியது. முதல் கட்டமாக 25 நபர்கள் கடைகள் அமைத்து வியாபாரத்தை தொடங்கினர்.

சமூக இடைவெளியுடன் கிருமி நாசினி தெளித்து கடைகள் திறக்கப்பட்டது. நகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பின் கீழ் வியாபாரம் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →