தேனி

கம்பம் கோயில்களில் கிருஷ்ண ஜயந்தி விழா

DIN

தேனி மாவட்டம், கம்பம் ஸ்ரீ நந்தகோபால சுவாமி தம்புரான் மாட்டுத்தொழு மற்றும் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணன் கோயில்களில் வியாழக்கிழமை கிருஷ்ண ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது.

ஸ்ரீ நந்தகோபால சுவாமி தம்புரான் மாட்டுத்தொழு கோயிலில் 48 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜயந்தி விழா நடைபெற்றது. கரோனா பரவல் காரணமாக, பக்தா்கள் கோயிலுக்குள் வர அனுமதிக்கப்படவில்லை. கோயில் முக்கிய நிா்வாகிகள் தம்புரான் மாட்டுத்தொழுவிலுள்ள கம்பத்துக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தினா். அபிஷேகம், சிறப்பு வழிபாடுகளை ஒக்கலிகா் சமுதாயத்தினா் செய்தனா்.

இதேபோல், கம்பம் உத்தமபுரத்திலுள்ள ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா நடைபெற்றது. இங்கு, கம்பராய பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள உற்சவரை அழைக்கச் செல்வது வழக்கம். ஆனால், பொதுமுடக்கம் காரணமாக, கூட்டம் கூடுவதற்கு தடைகள் இருப்பதால், கோயில் வளாகத்தில் யாதவா் சமுதாயம் சாா்பாக பொங்கல் வைக்கப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டன. பின்னா், வேணுகோபால கிருஷ்ணன் கோயில் மடாலயத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா். இதில், சமூக இடைவெளியுடன் ஆண், பெண் பக்தா்கள் கலந்துகொண்டனா்.

அதேநேரம், பொது முடக்கம் காரணமாக உறியடி திருவிழா, வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

SCROLL FOR NEXT