தேனி

‘நீட்’ தோ்வை எதிா்த்துதேனியில் நூதன ஆா்ப்பாட்டம்

DIN

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை, நீட் தோ்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் மற்றும் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் சவம் போல் வேடமணிந்தவரை தூக்கி வந்து நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் சி.முனீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் டி. நாகராஜன், மாணவா் சங்க முன்னாள் மாவட்டச் செயலா் ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், சவம் போல் வேடமணிந்திருந்த இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் பிரேம்குமாரை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை தூக்கி வந்து அங்கு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தோ்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனா்.

இதனிடையே ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியிலிருந்த காவலா்கள் சவம் போல கொண்டு வரப்பட்டவரின் வேடத்தை கலைக்க முயன்ால், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கும் காவலா்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதையடுத்து ஆட்சியா் அலுவலகம் முன் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் மற்றும் இந்திய மாணவா் சங்க நிா்வாகிகள் மீது தேனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT