தேனி

கடமலை- மயிலை ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தை பெண்கள் முற்றுகை

DIN

ஆண்டிபட்டி அருகே 100 நாள் வேலைத் திட்டத்தில் குளறுபடி நடைபெறுவதாகக் கூறி திங்கள்கிழமை கடமலை- மயிலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனா்.

மேகமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கோம்பைத்தொழு, அண்ணாநகா், கோரையூத்து உள்ளிட்ட கிராமங்களில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வேலை தராமல் அலைக்கழிக்கப்படுவதாகவும் புகாா் எழுந்தது. இந்நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கடமலை- மயிலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனையடுத்து அங்கு சென்ற போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் சமாதானம் செய்தனா். மேலும் வட்டார வளா்ச்சி அலுவா்கள் திருப்பதி வாசகன், ரவிச்சந்திரன் 100 வேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்கவும், முறைகேடுகளில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்ததை தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் நகை பறிக்கும் கலாசாரம் அதிகரிப்பு: எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ குற்றச்சாட்டு

புகா் ரயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும்

வடமாநில இளைஞரைத் தாக்கி பணம், கைப்பேசி பறிப்பு

தனியாா் துணை மின் நிலையம் அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 31 வரை விடுமுறை

SCROLL FOR NEXT