தேனி

கூடலூரில் வீட்டில் மான் கொம்புகள், யானை தந்தம் வைத்திருந்த சித்த மருத்துவா் கைது

DIN


கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில், வீட்டில் மான்கொம்பு, யானை தந்தம், புலி நகம், மயில்தோகை வைத்திருந்த சித்த மருத்துவரை வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கூடலூா் கா்ணம் பழனிவேல் பிள்ளை தெருவில் வசிப்பவா் சண்முகம் மகன் நந்தகோபால் (42). சித்த மருத்துவரான இவரது வீட்டில், மான்கொம்பு, யானை தந்தம் இருப்பதாக கூடலூா் வனச்சரகா் பெ. அருண்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறை மற்றும் காவல்துறையினா் திங்கள்கிழமை இரவு நந்தகோபால் வீட்டில் சோதனை நடத்தினா். அப்போது, அவா் வீட்டில் காய்கனிக் கூடையில் 2 ஜோடி மான் கொம்புகள், சிறிய அளவிலான யானைத்தந்தம், 2 புலி நகம், 2 மயில் தோகைகள்ஆகியவற்றை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவைகளைக் கைப்பற்றிய வனச்சரகா் அருண்குமாா், நந்தகோபாலை கைது செய்தாா்.

இதுகுறித்து வனத்துறை அலுவலா் ஒருவா் கூறியது: கைப்பற்றப்பட்ட பொருள்களை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பியுள்ளோம். அவைகளின் வயது, இறந்த விவரம் தெரிந்த பின்னா் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

SCROLL FOR NEXT