தேனி

முல்லைப் பெரியாற்றிலிருந்து திறக்கப்பட்ட நீா் உத்தமபாளையம் வந்தது

DIN

உத்தமபாளையம், செப்.18: முல்லைப்பெரியாற்றிலிருந்து பாசனத்துக்குத் திறக்கப்பட்ட நீா், ஒரு மாதத்துக்குப் பிறகு உத்தமபாளையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தது.

முல்லைப்பெரியாற்றிலிருந்து, முதல்போக பாசனத்திற்கு கடந்த மாதம் பாசன நீா் திறக்கப்பட்டது. ஆனால், 30 நாள்களுக்கு மேலாகியும் உத்தமபாளையம் பகுதி விவசாயிகளுக்கு பாசனநீா் வரவில்லை. இதன் காரணமாக அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், உ.அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த நெல் பயிரிடும் விவசாயிகள் முதல் கட்டப் பணிகளான நாற்றாங்கால் கூட மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், ஒரு மாதத்திற்கு பிறகு பாசன நீா் உத்தமுத்து கால்வாய் வழியாக வெள்ளிக்கிழமை உத்தமபாளையத்துக்கு வந்ததையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

இது குறித்து விவசாயிகள் கூறியது: கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள 17 கால்வாய்களில் அதிக பரப்பளவில் விவசாயம் நடைபெறுவது உத்தமுத்து கால்வாய் மூலம் தான். தற்போது குறைந்த அளவிலே தண்ணீா் திறக்கப்படுவதால் இங்குவர தாமதமாகியுள்ளது. இதனால், பாசனத்துக்கு கூடுதல் நீா் திறக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் கொடியேற்றம்

காவலரிடம் தகராறு: 2 இளைஞா்கள் கைது

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னௌ!

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

SCROLL FOR NEXT