தேனி

ஒக்கரைப்பட்டியில் குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஒக்கரைப்பட்டி கிராமத்தில் முறையாக குடிநீா் விநியோகிக்கக் கோரி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆண்டிபட்டி அருகே உள்ள ஒக்கரைப்பட்டி கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்த கிராமத்துக்கு குன்னூா் கூட்டுக் குடிநீா்த் திட்டத்திலிருந்து குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒக்கரைப்பட்டி காலனி பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக முறையாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லையாம். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம். இந்நிலையில் அப்பகுதி மக்கள் திடீரென ஜீ.உசிலம்பட்டி - ஆண்டிபட்டி கிராம சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவா் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு!

தூத்துக்குடியில் தீத்தடுப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொளுத்தும் வெயில்..!

SCROLL FOR NEXT