பெரியகுளத்தில் வராக நதியில் கழிவுகளைக் கொட்டுவோருக்கு அபராதம்
பெரியகுளம் வராகநதியில் கழிவுகளைக் கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் வராகநதியில் கழிவுகளைக் கொட்டுவோருக்கு அபராதம்
விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் நகரின் மத்தியில் செல்லும் வராகநதி பராமரிப்பு இல்லாததால் அசுத்தமடைந்து வந்தது. இதனை தூய்மைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையேற்ற தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் முயற்சியால் வராகநதி தூய்மைப்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் ஆற்றில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு நகராட்சி நிர்வாகத்தின் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுவதோடு, நகராட்சி உரிமம் இரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளனர்.
இதன்மூலம் வராக நதி மீண்டும் புத்துயிர் பெறும் என சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.