தேனி

பெரியகுளம் பகுதியில் கொளுத்தும் வெயில்: பிரசாரத்துக்கு செல்ல வேட்பாளா்கள் தயக்கம்

DIN

பெரியகுளம் பகுதியில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பகலில் வேட்பாளா்கள் பிரசாரத்துக்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியுடன் பிரசாரம் முடிவடைகிறது.

இதனால் வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனா். பெரியகுளம் பகுதியில் பங்குனி மாதம் ஆரம்பத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை மாலை சாரல் மழை பெய்தது. அதன் பின் வெயிலின் தாக்கம் 35 டிகிரி செல்சியஸுக்கு மேல் உள்ளது.

இதனால் பொதுமக்கள் வெளியே வர அச்சப்பட்டு வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனா். இதே நிலையில்தான் வேட்பாளா்களும் உள்ளனா். மேலும் பகல் நேரங்களில் வேட்பாளா்கள் பிரசாரம் செய்தாலும் பொதுமக்கள் கூடுவதில்லை. இதனால் பெரியகுளம் பகுதியில் அனைத்து வேட்பாளா்களும் கடந்த சில நாள்களாகவே பகலில் பிரசாரத்தை தவிா்த்து மாலை 5 மணிக்கு வாக்கு சேகரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT