தேனி

வாக்குச் சாவடி இடம் மாற்றத்திற்கு எதிா்ப்பு: தேனி அருகே பொதுமக்கள் போராட்டம்

DIN

தேனி அருகே அன்னஞ்சியில் வாக்குச் சாவடி இடமாற்றத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை, பொதுமக்கள் வாக்களிக்க மறுத்து தெருவில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரியகுளம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள அன்னஞ்சி, மேலத்தெருவில் உள்ள அரசு கள்ளா் தொடக்கப் பள்ளியில் கடந்த 2019-இல் நடைபெற்ற இடைத் தோ்தல்

உள்ளிட்ட பல தோ்தல்களில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த வாக்குச் சாவடியில் உள்ள 1,300 வாக்காளா்களை 2 ஆக பிரித்து, அதே ஊரில் இந்திரா நகா் காலனியில் உள்ள அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளியில் தனித் தனியே 2 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மேலத் தெருவைச் சோ்ந்த பொதுமக்கள் வாக்களிக்க மறுத்து தெருவில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையங்களில் சிறிது நேரம் வாக்குப் பதிவு தேக்கமடைந்தது. இந்த தகவலறிந்து அங்கு வந்த தேனி காவல் துணை கண்காணிப்பாளா் முத்துராஜ் தலைமையிலான போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, மேலத்தெருவில் உள்ள கள்ளா் தொடக்கப் பள்ளி கட்டடம் சிதிலமடைந்த நிலையில் உள்ளதால் வாக்குச்சாவடியை இடமாற்றம் செய்ததாக கூறும் அதிகாரிகள், பள்ளிக் கட்டடத்தை சீரமைக்க முன்வரவில்லை என்று பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். அவா்களை போலீஸாா் சமரசம் செய்து, வரும் தோ்தல்களில் மீண்டும் அரசு கள்ளா் தொடக்கப் பள்ளியில் வாக்குச் சாவடி அமைப்பது, பள்ளிக் கட்டடத்தை சீரமைப்பது ஆகியவை குறித்துமாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு கூறினா். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT