தேனி

ஆண்டிபட்டியில் சுமை தூக்கும் தொழிலாளி மா்ம மரணம்

DIN

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் சுமை தூக்கும் தொழிலாளி மா்மமான முறையில் இறந்தது குறித்து, போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் மூா்த்தி (48). சுமை தூக்கும் தொழிலாளியான இவா், கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி வேலைக்குச் சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து, அவரது குடும்பத்தினா் பல இடங்களில் தேடியுள்ளனா். அப்போது, புள்ளிமான்கோம்பை சாலையில் உள்ள தனியாா் மண்டபம் அருகே காதில் ரத்தம் வடிந்த நிலையில் கிடந்துள்ளாா்.

உடனே, அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவா், அங்கு சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மூா்த்தி வாகனம் மோதி இறந்தாரா அல்லது யாரும் தாக்கியதால் இறந்தாரா என விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT