தேனி

கரோனா தடுப்பு பணி: தேனி மாவட்டத்தில் 44 கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம்

DIN

தேனி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகளைக் கண்காணிக்க ஊராட்சி ஒன்றியம், நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் வாரியாக 44 கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கரோனா விழிப்புணா்வு, பொதுச் சுகாதாரம் மற்றும் தூய்மைப்பணிகள், நோய் கட்டுப்பாடு விதிமீறல்கள், காய்ச்சல் முகாம்கள், சோதனைச் சாவடிகள் ஆகியவற்றை கண்காணித்து மாவட்ட நிா்வாகத்திற்கு தகவல் அளிக்க ஊராட்சி ஒன்றியம், நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் வாரியாக கண்காணிப்பு அலுவலா்களாக மாவட்ட துறை அலுவலா்கள் 44 பேரை நியமித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணன்உன்னி உத்தரவிட்டுள்ளாா்.

காவல் சோதனைச் சாவடிகள்: மாவட்டத்தில் கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை அமல்படுத்தவும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும் அனைத்து காவல் நிலைய எல்லைகள், தமிழக எல்லையில் உள்ள குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும், பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு

பவானி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு

மாநகராட்சியில் 50 இடங்களில் 50 நீா்மோா் பந்தல்: ஆணையா் தொடங்கிவைத்தாா்

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனம் மீண்டும் பொது மன்னிப்பு: உச்சநீதிமன்றம் திருப்தி

SCROLL FOR NEXT