தேனி

சுருளி அருவி வனப் பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை

DIN

தேனி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சுருளி அருவிப் பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் செல்ல வனத் துறையினா் தடைவிதித்துள்ளனா்.

கரோனா பரவல் காரணமாக, சுருளி அருவி கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் மூடப்பட்டது. மீண்டும், இந்தாண்டு மாா்ச் மாதம் திறக்கப்பட்டது. ஆனால், அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால், சுருளி அருவிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் நுழைவுக் கட்டணம் ரூ.30 மட்டும் செலுத்தி, வனப் பகுதிக்குள் நடந்து சென்று இயற்கை வளத்தை கண்டு ரசித்து வந்தனா்.

இந்நிலையில், தற்போது கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவுவதால், செவ்வாய்க்கிழமை முதல் சுருளி அருவி வனப் பகுதிக்குள் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக, மேகமலை வன உயிரினச் சரணாலயத்தின் கம்பம் கிழக்கு வனச் சரகத்தினா் தெரிவித்துள்ளனா். இது சம்பந்தமாக, நுழைவுவாயிலில் அறிவிப்புப் பலகையும் வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT