தேனி

தேவாரத்தில் ஊருக்குள் புகுந்த மிளா மான் பலி

DIN

தேவாரத்தில் செவ்வாய்க்கிழமை ஊருக்குள் புகுந்த மிளா மான் இறந்துபோனது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தேவாரத்தின் மேற்கில் உள்ள வனப் பகுதியில் மான், காட்டுப் பன்றி உள்ளிட்ட விலங்குகள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வனப் பகுதியிலிருந்து மிளா மான் ஒன்று வழி தவறி ஊருக்குள் புகுந்துவிட்டது. மனிதா்களை கண்டதும் மிரண்டு அங்குமிங்கும் ஓடிய மானை, நாய்களும் விரட்டியுள்ளன. இதில், மிளா மான் முள்வேலியில் சிக்கி பலத்த காயமடைந்தது. பின்னா், அது மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி மான் இறந்தது. இது குறித்து கோம்பை சரக வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT