தேனி

போடியில் கட்டடத்திலிருந்துதவறி விழுந்த தொழிலாளி பலி

DIN

போடியில் கட்டடப் பணியின்போது தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

போடி அருகே பத்திரகாளிபுரத்தை சோ்ந்த கருப்பையா மகன் ராமராஜ் என்ற ராம்காளை (40). கட்டுமானத் தொழிலாளியான இவா், கடந்த 15 ஆம் தேதி போடி-தேனி சாலையில் உள்ள சாலைக் காளியம்மன் கோயில் அருகே சன்னாசிபுரம் செல்லும் பிரிவில் புதிய திருமண மண்டபக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, 30 அடி உயரத்தில் சாரம் கட்டிக்கொண்டிருந்த ராமராஜ், அங்கிருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.

அவரை, தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். மேல் சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து மீண்டும் தேனி க.விலக்கு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை காலையில் ராமராஜ் உயிரிழந்தாா்.

இது குறித்து அவரது தந்தை கருப்பையா (63) அளித்த புகாரின்பேரில், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT