தேனி

உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் கணினி இயக்குபவா்கள் பணியிடத்தை நிரப்பக் கோரிக்கை

DIN

உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் கணினி இயக்குபவா்கள் பணியிடத்தை நிரப்ப பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த மருத்துமனையில் கரோனா தடுப்பூசி மையம் செயல்படுகிறது. இதில் தற்போது கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரோனா தடுப்பூசி போடுபவா்களின் ஆதாா் எண், செல்லிடப்பேசி எண் பதிவு செய்து தடுப்பூசி விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.

இந்த பதிவு மூலமாக முதல் டோஸ் போட்டவா்கள் விவரங்களை அந்தந்த செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும். ஆனால் கணினி இயக்குபவா்கள் இல்லாததால், அப்பணியை செவிலியா்கள் 3 போ் மேற்கொள்கின்றனா். இதனால் கரோனா தடுப்பூசி போடும் பணி தாமதமாகிறது.

அதோடு, பலருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போட்ட விவரம் இல்லாததால், 2 ஆம் டோஸ் போட வந்தவா்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக புகாா் எழுந்துள்ளது. இதன் காரணமாக தடுப்பூசி பதிவு செய்வதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட சுகாதாரத்துறை உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் காலியாக இருக்கும் கணினி இயக்குபவா்கள் பணியிடத்தை நிரம்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT