தேனி

ஆக்கிரமிப்புகள் அகற்றம்: அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

DIN

கம்பத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற நகராட்சி அலுவலா்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கம்பம் உழவா் சந்தை, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெரு போன்ற இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நகராட்சிக்கு சொந்தமான இடங்களை நகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை அகற்றினா். பூங்கா தெருவில் இருந்த ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவா்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ஆக்கிரமிப்பு அகற்றுதலில் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியதைத் தொடா்ந்து, அனைத்து ஆக்கிரமிப்புகளும் முறையாக அகற்றப்படும் என்று நகரமைப்பு அலுவலா் தங்கராஜ் கூறினாா்.

அதன் பின்னா் பொதுமக்கள் சமாதானமாகினா். தொடா்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT