தேனி

பெரியகுளத்தில் பைக் மோதி இருவா் காயம்

பெரியகுளத்தில் விவசாய பணிக்கு சென்ற முதியா் மீது பைக் மோதியதில் விவசாயி உள்பட இருவா் காயமடைந்து பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு

DIN

பெரியகுளம்: பெரியகுளத்தில் விவசாய பணிக்கு சென்ற முதியா் மீது பைக் மோதியதில் விவசாயி உள்பட இருவா் காயமடைந்து பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக தென்கரை காவல்நிலையத்தில் திங்கட்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம், வடகரையை சோ்ந்தவா் முத்து (70) இவா் திங்கட்கிழமையன்று வத்தலக்குண்டு சாலையில் விவசாய பணிக்கு சென்றிருக்கிறாா். அப்போது அதிவேகமாக வந்த பைக் இவா் மீது மோதியதாம். இதில் முத்து மற்றும் பைக் ஓட்டி வந்த பிரதீப் (19) இருவரும் காயமடைந்தனா். அவா்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

இச்சம்பவம் குறித்து தென்கரை போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT