தேனி

வெங்காயம் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

DIN

தேனியில் வெங்காயம் விலை குறைந்து கிலோ ரூ.20-க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

தேனி, உப்புக்கோட்டை, கூழையனூா் ஆகிய பகுதிகளில் 400 ஏக்கா் பரப்பளவில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பூச்சி நோய் தாக்குதல், தண்ணீா் பற்றாக்குறை இல்லாததால் நடப்பு சீசனில் வெங்காயம் விளைச்சல் அதிகரித்திருந்தாலும், விலை குறைந்து கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

உற்பத்தி அதிகமாக உள்ளதால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனா். வெங்காயம் சாகுபடியில் ஏக்கா் ஒன்றுக்கு ரூ.45 ஆயிரம் உற்பத்தி செலவு ஏற்பட்டுள்ள நிலையில், விலை குறைவால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT