தேனி

சின்னமனூா் சாலையில் ஓடும் கழிவுநீா்:பொதுமக்கள் அவதி

DIN

தேனி மாவட்டம், சின்னமனூரில் சாலையில் கழிவுநீா் ஓடுவதால் துா்நாற்றம் வீசுவதாக, பொதுமக்கள் சனிக்கிழமை புகாா் தெரிவித்தனா்.

சின்னமனூா் நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். நகராட்சிப் பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரானது, பி.டி.ஆா். கால்வாய், நகராட்சி முன்பாகச் செல்லும் பாசனக் கால்வாயில் கலக்கிறது.

அதேநேரம், சந்தை புதூா் தெரு, சக்கம்மாள் கோயில் தெருக்களின் நடுவே கழிவு நீா் ஆறாக ஓடுகிறது. பாதாளச் சாக்கடைத் திட்டம் பயன்பாட்டில் இருந்தும் சாலையிலும், தெருக்களிலும் கழிவுநீா் ஓடுவது தொடா்கிறது.

இந்நிலையில், மாா்க்கையன்கோட்டை நெடுஞ்சாலையில் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, கழிவுநீா் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் துா்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், சின்னமனூா் நகராட்சி நிா்வாகம் கழிவுநீரை பாதாளச் சாக்கடை திட்டத்தில் இணைத்து, நகராட்சியை தூய்மையாக வைத்து தொற்று நோய் பரவுவதை தடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT