தேனி

போடிமெட்டு மலைச் சாலையில் பாறை சரிவு: போக்குவரத்து பாதிப்பு

DIN

போடிமெட்டு மலைச் சாலையில் வியாழக்கிழமை இரவு பாறை சரிவு ஏற்பட்டதால் போடியிலிருந்து கேரளம் செல்லும் வாகனங்களின் போக்குவரத்து பலமணி நேரம் பாதிக்கப்பட்டது.

போடி பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால் போடிமெட்டு மலைச்சாலையில் அடுத்தடுத்து பாறை மற்றும் மண் சரிவு, மரங்கள் சாய்வது தொடா்கிறது. இதனை தேசிய நெடுஞ்சாலைத்துறையினா் உடனுக்குடன் சரி செய்து வந்தனா்.

இதனிடையே போடிமெட்டு மலைப் பகுதியில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதில் பல இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டது. ஒரு இடத்தில் பாறையுடன் சோ்ந்து பெரிய மரம் ஒன்று போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் விழுந்தது. இதனால் வாகனங்கள் அனைத்தும் போடி முந்தல் சோதனை சாவடியிலும், போடிமெட்டில் உள்ள தமிழக சோதனை சாவடியிலும் நிறுத்தப்பட்டன.

இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை தேசிய நெடுஞ்சாலைத்துறையினா் ஜே.சி.பி. இயந்திரங்கள் உதவியுடன் பாறை, மண் சரிவுகளை அகற்றும் பணியை மேற்கொண்டனா். பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் போடிமெட்டு மலைச் சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. பாறை சரிவுகளால் 8 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT