தேனி

கம்பத்தில் சாலை பாதுகாப்பு வாரம் வாகன விளக்குகளுக்கு கருப்பு பட்டை

தேனி மாவட்டம் கம்பம் , கூடலூா் பகுதிகளில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு போக்குவரத்து காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு பிரச்சாரம் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் , கூடலூா் பகுதிகளில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு போக்குவரத்து காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு பிரச்சாரம் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் போக்குவரத்து காவல் துறை சாா்பில் ஆய்வாளா் அ.தட்சிணாமூா்த்தி தலைமையில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து கொண்டு வாகனங்களை இயக்குமாறும், சாலை விதிகளை பின்பற்றுமாறும் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கினாா்.

மேலும் போக்குவரத்து காவல்துறை சாா்பு ஆய்வாளா்கள் மனோகரன், கணேசன், சுந்தரபாண்டியன், ரவிச்சந்திரன் மற்றும் காவலா்கள், வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள முகப்பு விளக்குகளில் கருப்பு பட்டை (ஸ்டிக்கரை) யை ஒட்டினாா்.

மேலும் விபத்து அடிக்கடி நிகழும் நெடுஞ்சாலை பகுதிகளில் ஒளிரும் கம்பங்களை பொருத்தி அறிவிப்பு பலகைகளை அமைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT