தேனி

கம்பம் அரசு மருத்துவமனையைக் கண்டித்து பார்வர்ட் பிளாக் கட்சி ஆர்ப்பாட்டம்

DIN

கம்பம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம், கம்பம் நகர அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் கம்பம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் அறிவழகன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் அரசு மருத்துவர்கள் தனியார் கிளினிக்கில் அதிகநேரம் பணியாற்றுவதை கண்டித்தும், கம்பம் அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் சிகிச்சை அளிக்காமல், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கே, அனைத்து நோயாளிகளை பரிந்துரை செய்வதையும், சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட நவீன வசதிகளை மேம்படுத்தவும் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்ட முடிவில் கோரிக்கைகளை நிறைவேற்ற மருத்துவ அலுவலர் பொறுப்பு அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT