தேனி

தேனி மாவட்டத்தில் 5,492 பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம்

DIN

தேனி மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகன மானியம் திட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 5,492 பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் அம்மா இருசக்கர வாகன மானியத் திட்டத்தின் கீழ், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கு, வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

இத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் கடந்த 2017-18-ஆம் நிதியாண்டு முதல் தற்போது வரை 5,492 பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்காக அரசு சாா்பில் மொத்தம் ரூ.13.74 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. அம்மா இருசக்கர வாகன மானியம் திட்டத்தின் கீழ் அரசு மானியம் பெற விரும்பும் வேலைக்குச் செல்லும் பெண்கள் சம்மந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இலவசமாக படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம் என்று அச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT